நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: அதிமுகவினர் கொண்டாட்டம்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசு வெற்றி பெற்றதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஆரணி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அதிமுக நிர்வாகி ஏ.ஜி.ஆர்.மோகன் தலைமையில் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து அந்தக் கட்சியினர் கொண்டாடினர். முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், வழக்குரைஞர் குமரன், சேவூர் பீமன், தொழிற்சங்க நிர்வாகி உதயசங்கர், சைதை சுப்பிரமணி, காந்திநகர் விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வந்தவாசி: வந்தவாசி தேரடி பகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். மேலும், பொதுமக்களுக்கு அவர்கள் இனிப்பு வழங்கினர். இதில் அதிமுக நிர்வாகிகள் பச்சையப்பன், லோகேஷ்வரன், அர்ஜூனன், எஸ்.தர்மதுரை, எ.விஜய், மேகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்யாறு: செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே இருந்து மேளதாளத்துடன் புறப்பட்டு பேருந்து நிலையம் வரை தொடர்ந்து பட்டாசு வெடித்தபடி அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் மாணவரணியைச் சேர்ந்த மகேந்திரன், சி.துரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாமண்டூர் கார்த்திகேயன், கீழாத்தூர் ராமசாமி, பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செங்கம்: செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் ஒன்றியச் செயலர் ஆர்.மதியழகன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. உடன், பேரவை ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக்கழகப் பேச்சாளர் வெங்கட்ராமன், நகரச் செயலர் ஆனந்தன், நகர பேரவை செயலர் குமார், நகரப் பொருளர் ஜெகன், கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர் உள்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *